Thursday, 5 September 2013

If you are a first-time visitor, please be sure to like us on Facebook and receive our exciting and innovative information on our products and health topics!
விநாயகரின் தத்துவம் விநாயகர் அஷ்டகத்தின் மூலம்
இங்கு விளக்கப்படுகிறது.    இந்த நூல் "காரியசித்தி மாலை" என்றும் அழைக்கப்படுகிறது. ஏன் அவ்வாறு அழைக்கப் படுகிறது என்பது நூலின் பிற்பகுதியில் கூறப்பட்டிருக்கும் நூற்பலனிலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த வழிபாடு முற்றிலும் தமிழேலேயே அமைந்தது. எளிதானது, எளிமையானது.



காரியசித்திமாலை (விநாயகர்அஷ்டகம்)
(
காசிபமுனிவர்இயற்றியது, கச்சியப்பர்மொழிபெயர்த்தது)
**************************************************************

பந்தம்அகற்றும்அநந்தகுணப்பரப்பும்எவன்பால்உதிக்குமோ
எந்தஉலகும்எவனிடத்தில்ஈண்டிஇருந்துகரக்குமோ
சந்தமறைஆகமங்கலைகள்அனைத்தும்எவன்பால்தகவருமோ
அந்தஇறையாம்கணபதியைஅன்புகூரத்தொழுகின்றோம்.

பொருள்:எல்லாவிதமானபற்றுகளையும்அறுத்தும், நற்குணங்களின்உற்பத்தியிடமாகவும்இவ்வுலகையேஉண்டாக்கியும், காத்தும்மறைத்தும்லீலைகள்செய்பவனும்வேதங்களுக்கும்ஆகமங்களுக்கும்அறுபத்துநான்குகலைகளுக்கும்தலைவனாகஇருக்கும்முழுமுதற்கடவுளாம்விநாயகப்பெருமானைஅன்புடன்தொழுவோம்.

உலகமுழுவதும்நீக்கமறஒன்றாய்நிற்கும்பொருள்எவன்அவ்
உலகிற்பிறக்கும்விவகாரங்கள்உறாதமேலாம்ஒளியாவன்?
உலகம்புரியும்வினைப்பயனைஊட்டும்களைகண்எவன்அந்த
உலகமுதலைக்கணபதியைஉவந்துசரணம்அடைகின்றோம்.

பொருள்:எல்லாஉலகங்களையும்நீக்கமறஒருவனாய்நின்றுகாப்பவர், உலகில்நிகழும்மாற்றங்கட்குஅப்பால்ஆனவர். மேலாம்ஒளியானவர்.உலகஉயிர்களின்வினைப்பயனைக்களைபவர், அவரேபெருந்தெய்வம்கணபதிஆவார்.அப்பெருந்தெய்வத்தின்திருவடிகளைமகிழ்வோடுசரண்அடைவோம்.

இடர்கள்முழுதும்எவனருளால்எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும்உயிர்கள்எவனருளால்சுரர்வாழ்பதியும்உறச்செய்யும்
கடவுள்முதலோர்க்குஊறின்றிகருமம்எவனால்முடிவுறும்அத்
தடவுமருப்புக்கணபதிபொன்சரணம்அடைகின்றோம்.

பொருள்:நம்துன்பங்கள்முழுவதும்யார்திருவருளால்தீயில்விழுந்தபஞ்சுபோல்பொசுங்குமோ, உலகஉயிர்களையார்அமரர்உலகில்சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள்திருவருளால்நாம்செய்தபாபங்கள்தொலையுமோஅந்தநீண்டதந்தங்களையுடையகணபதியின்பொன்னார்திருவடிகளைச்சரண்அடைவோம்.

மூர்த்தியாகித்தலமாகிமுந்நீர்கங்கைமுதலான
தீர்த்தமாகிஅறிந்தறியாத்திறத்தினாலும்உயிர்க்குநலம்
ஆர்த்திநாளும்அறியாமைஅகற்றிஅறிவிப்பான்எவன்அப்
போர்த்தகருணைக்கணபதியைப்புகழ்ந்துசரணம்அடைகின்றோம்.

பொருள்:எல்லாமூர்த்தங்களுக்கும்மூலமூர்த்தமாகஇருப்பவரும், எல்லாஊர்களிலும்எழுந்தருளிஇருப்பவரும், கங்கைமுதலானஎல்லாநதிகளிலும்நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும்அறிந்தும்ஏதும்அறியாதார்போல்இருப்பவரும், எல்லாஉயிர்களுக்கும்நாளும்நலம்புரிபவரும், அறியாமையைஅகற்றிநல்லறிவைத்தருபவரும்ஆகியகணபதிப்பெருமானின்திருவடிகளைப்புகழ்ந்துநாம்சரண்அடைவோம்.

செய்யும்வினையின்முதல்யாவன்செய்யப்படும்அப்பொருள்யாவன்
ஐயமின்றிஉளதாகும்அந்தக்கருமப்பயன்யாவன்
உய்யும்வினையின்பயன்விளைவில்ஊட்டிவிடுப்பான்எவன்அந்தப்
பொய்யிஇறையைக்கணபதியைப்புரிந்துசரணம்அடைகின்றோம்.

பொருள்:செயல்களாகவும், செய்யப்படும்பொருள்களாகவும்இருப்பவர். எல்லாப்பொருள்களிலும்நீக்கமறநிறைந்திருப்பவர்.நாம்செய்யும்வினைப்பயனாகஇருப்பவர்.அவ்வினைப்பயன்களில்இருந்தும்நம்மைவிடுப்பவர்.அவரேமுழுமுதற்கடவுள்கணபதிஆவார்.அந்த்மெய்யானதெய்வதைநாம்சரண்அடைவோம்.

வேதம்அளந்தும்அறிவரியவிகிர்தன்யாவன்விழுத்தகைய
வேதமுடிவில்நடம்நவிலும்விமலன்யாவன்விளங்குபர
நாதமுடிவில்வீற்றிருக்கும்நாதன்எவன்எண்குணன்எவன்அப்
போதமுதலைக்கணபதியைப்புகழ்ந்துசரணம்அடைகின்றோம்.

பொருள்:வேதங்களுக்குஎல்லம்தலைவனாகஇருப்பவனும், யாவராலும்அறிந்துகொள்ளுதற்குஅரியமேலானவனாகஇருப்பவனும், வேதத்தின்முடிவாகஇருந்துநடம்புரியும்குற்றமற்றவனும், வெட்டவெளியில்எழும்ஒங்காரத்தின்ஒலிவடிவாகஇருப்பவனும், தன்வயத்தனாதல்; தூயஉடம்பினன்ஆதல்; இயற்கைஉணர்வினன்ஆதல்; முற்றும்உணர்தல்; இயல்பாகவேபாசங்களில்இருந்துநீங்குதல்; பொருள்உடைமை; முடிவில்ஆற்றல்உடைமை; வரம்பில்இன்பம்உடைமை, இவற்றைமுறையேவடநூலார்சுதந்தரத்துவம்விசுத்ததேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபதசக்தி; அநந்தசக்தி; திருப்திஆகியஎட்டுக்குணங்களைக்கொண்டவனும், ஆனமுழுமுதற்கடவுளாம்விநாயகப்பெருமானின்திருவடிகளைச்சரண் அடைவோம்.

மண்ணின்ஓர்ஐங்குணமாகிவதிவான்எவன்நீரிடைநான்காய்
நண்ணிஅமர்வான்எவன்தீயின்மூன்றாய்நவில்வான்எவன்வளியின்
எண்ணும்இரண்டுகுணமாகிஇயைவான்எவன்வானிடைஒன்றாம்
அண்ணல்எவன்அக்கணபதியைஅன்பிற்சரணம்அடைகின்றோம்.

பொருள்:மண்ணில்ஐந்துவகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர், கடல்நீர்எனநான்காகஇருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன்எனத்தீயில்மூன்றாகஇருப்பவரும், காற்றில்புயற்காற்றாகஇருப்பவரும், எங்கும்ஒன்றாய்இருக்கும்வான்வெளியாய்இருப்பவருமாகியவிநாயகப்பெருமானின்திருவடிகளைஅன்புடன்சரண்அடைவோம்.

பாசஅறிவில்பசுஅறிவில்பற்றற்கரியபரன்யாவன்
பாசஅறிவும்பசுஅறிவும்பயிலப்பணிக்கும்அவன்யாவன்
பாசஅறிவும்பசுஅறிவும்பாற்றிமேலாம்அறிவான
தேசன்எவன்அக்கணபதியைத்திகழச்சரணம்அடைகின்றோம்.

பொருள்:எந்தப்பந்தமும்அற்றவன்; பசுவாகியஆன்மாவும், பதியாகியஇறைவனும்அவனே! அறிவினால்அவனைஅறியமுடியாது.அவன்பந்தமேஇல்லாதவன்.ஆனால்எல்லாஉயிர்களையும்பந்தப்படுத்துபவன்.அவன்மேலானவன்.அறிவுடையவன்.அத்தகையகணபதியைநாம்சரண்அடைவோம்.பசுபதிஇரண்டுமேஇறைவன்.பசுபதியோடுஒடுங்குவதேஅழியாஇன்பநிலையாகும்.இதையேதுரியம், துரியாதீதம்என்றுசைவசித்தாந்தம்கூறும்.

நூற்பயன்
இந்தநமதுதோத்திரத்தையாவன்மூன்றுதினமும்உம்மைச்
சந்திகளில்தோத்திரஞ்செயினும்சகலகருமசித்திபெறும்
சிந்தைமகிழச்சுகம்பெறும்எண்தினம்உச்சரிக்கின்சதுர்த்தியிடைப்
பந்தம்அகலஓர்எண்கால்படிக்கில்அட்டசித்தியுறும்.

பொருள்:இத்தோத்திரப்பாடல்களைமூன்றுநாட்கள்சந்தியாநேரத்தில்யார்பாராயணம்செய்கின்றார்களோஅவர்கள்செய்யும்நற்காரியங்களில்வெற்றிபெறுவார்கள்.தொடர்ந்துஎட்டுநாட்கள்படித்தால்மனம்மகிழும்படியானநலம்பெறுவார்கள்.சதுர்த்தியன்றுநற்சிந்தையுடன்எட்டுத்தடவவைகள்பாராயணம்செய்தால்அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதைபோன்ற (எட்டு) அட்டமாசித்துளையும்பெறுவார்கள்.

திங்கள்இரண்டுதினந்தோறும்திகழஒருபான்முறையோதில்
தங்கும்அரசவசியமாம்தயங்கஇருபத்தொருமுறைமை
பொங்கும்உழுவலால்கிளப்பின்பொருவின்மைந்தர்விழுக்கல்வி
துங்கவெறுக்கைமுதற்பலவும்தோன்றும்எனச்செப்பினர்மறைந்தார்

பொருள்:தொடர்ந்துஇருமாதங்கள்நாள்தோறும்முறையாகப்பாராயணம்செய்தால்அரசர்களும்வசியம்ஆவார்கள். தினமும்இருபத்தோருமுறைகள்பாராயணம்செய்தால்குழந்தைச்செல்வம், கல்விச்செல்வம்நலம்போன்றசகலசெவங்களும்வந்துசேரும்
உரைஎழுதியவர்: திருப்பனந்தாள்புலவர்க. துரியானந்தம்.


Tagged:

0 comments:

Post a Comment